• Nov 17 2024

ராகினியை விழுந்து விழுந்து கவனித்த அர்ஜுன் குடும்பத்தினர்- சரஸ்வதிக்கு காத்திருந்த அதிர்ச்சி- நக்கலடித்த வசு-Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் புதிய கம்பெனியை வாங்கியதால் சரஸ்வதியும் நமச்சியும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். அத்தோடு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் ராகினிக்கு எதுக்காக திடீர்னு வீட்டை எழுதிக் கொடுத்தாங்க என்று சொல்ல, தமிழ் இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத வேலை எங்க கம்பனியை எப்படி முன்னுக்கு கொண்டு வருவதைப் பற்றி பேசுங்க என்று சொல்லி விட்டு கிளம்பிப் போகின்றார்.

அப்போது நமச்சி சேகர் மட்டும் நளைக்கு அந்த வீடியோவைக் கொண்டு வந்து தந்தால் எல்லாம் சரி ஆகிடும் என்று சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருக்கின்றார்.மறுபுறம் அர்ஜுனின் மாமா அர்ஜுனிடம் சரஸ்வதி அர்ஜுனைப் பற்றிய வீடியோ ஒன்றை சேகர் என்பவரை வைத்து கேட்டிருக்கிறாங்க என்று விஷயத்தைச் சொல்ல அர்ஜுன் சேகர் வீட்டிற்க தனது மாமாவுடன் செல்கின்றார்.


அப்போது அர்ஜுனின் மாமா உள்ளே சென்று சேகரிடம் பணம் தருகின்றேன். அந்த வீடியோவைக் கொடுக்காதீங்க என்று சொல்ல சேகர் அர்ஜுனின் மாமாவைத் திட்டி அனுப்புகின்றார்.பின்னர் இரவு ஆனதும் தமிழின் அப்பா வீட்டுக்கு நமச்சி,வர நாளைக்கு அந்த வீடியோ கிடைக்கும் அதை உடனே எல்லோருக்கும் போட்டுக் காட்டி உண்மையை நிரூபிக்கனும் என்று சொல்கின்றார்.

அதற்கு சரஸ்வதியும் அந்த வீடியோ மட்டும் தான் எங்களுடைய கடைசி நம்பிக்கை, அதுவும் இல்லை என்றால் தமிழ் வாழ்நாள் முழுக்க இப்பிடியொரு பழியோடு இருக்க வேண்டி வரும் என்று சொல்லி கவலைப்பட அவரது மாமனார் ஆறுதல்ப்படுத்துகின்றார்.பின்னர் விடிந்ததும் சேகர் என்பவர் வந்து அந்த வீடியோ எடுக்க முடியாது என்று சொல்லி விட்டுச் செல்ல சரஸ்வதியும் நமச்சியும் அதிர்ச்சியடைகின்றனர்.

பின்னர் அந்த சேகர் அர்ஜுனிடம் சென்று நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன் என்று கூறி பணத்தை வாங்கிக் கொண்டு போகின்றார்.இதனால் சரஸ்வதி போட்ட பிளானை காலி பண்ணி விட்டதாக நினைத்து அர்ஜுன் சந்தோசப்படுகின்றார். மறுபுறம் அர்ஜுன் குடும்பத்தினர் விழுந்து விழுந்து ராகினியை கவனிக்கின்றனர். அப்போது வசு கார்த்திக்கிடம் வீட்டை எழுதி வாங்கிட்டாங்க தானே, அதனால் தான் இவ்வளவு கவனிப்பு என்று நக்கலடிக்கின்றார்.


அப்போது கோதை வந்து புதுவீட்டுக்கு எப்போ போகப்போறீங்க என்று கேட்க ராகினி எங்களுக்கு கல்யாண நாள் வருது அது முடிஞ்சவுடனேயே அடுத்த நாள் போய்டுவோம் என்று சொல்லி கோதையிடம் சண்டை போட கோதை நான் ஜோசியர் கிட்ட தான் போறேன் அதான் கேட்டேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி ஜோசியர் வீட்டுக்குச் செல்கின்றனர்.யோசியரைப் பார்த்து பேசும் போது அவர் நிங்க ஒரு பாம்பை வீட்டுக்குள்ள வைச்சிருக்கிறீங்க என்று சொல்ல இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement