சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது சின்னத்திரை நடிகர்களான திவ்யா-அர்ணவ் குறித்த பிரச்சினை தான். அதாவது தன்னை சித்ரவதை செய்வதாக கூறி அர்ணவ்வின் மனைவியும், நடிகையுமான திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்ணவ் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அர்ணவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாகவும்" கூறியுள்ளார் அர்ணவ்.
அத்தோடு "திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு என்றும், அவர் தான் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த மனுவில் அர்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தனது புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத போலீசார் திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாடும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அர்ணவ் மீதான வழக்குகளை உடனடியாக ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் பலவும் உள்ளதால், இது குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மறுப்புத் தெரிவித்த நீதிபதி அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Listen News!