• Sep 21 2024

இரண்டு மாதங்களில் மூன்று படம் ரிலீஸ் செய்யவுள்ள அருள்நிதி-வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் காதநாயகனாக அறிமுகமானவர் தான் அருள்நிதி.

இவர் அதிக படங்கள் நடிக்காவிட்டாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் என்று தான் கூற வேண்டும்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமாண்டி காலனி, கே-14 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அருள்நிதி.

இவ்வாறு இருக்கையில் அருள்நிதி நடித்த டி பிளாக் என்ற திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியான நிலையில் ஜூலை 22ஆம் தேதி அவர் நடித்த மற்றொரு திரைப்படமான தேஜாவு என்ற படம் வெளியாக உள்ளது.

மேலும் இந்த நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அருள்நிதி நடித்த டைரி என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரான் எதான் யோஹான் இசை அமைத்துள்ளார்.அத்தோடு அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் ராஜா சேதுபதி படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் அருள்நிதியின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement