• Sep 20 2024

வசூலில் மண்ணைக் கவ்விய அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்'... இதுவரை செய்த வசூல் வெறும் இத்தனை கோடி தானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அருள்நிதியைப் பொறுத்தவரையில் இவர் சமீபகாலமாக கிராமத்து கதைகளை தேர்வு செய்வதை விடுத்து த்ரில்லர் கதைகளை தேர்வு செய்து அமோகமாக நடித்து வருகின்றார். ஆனால் தற்போது மீண்டும் இவர் கிராமத்து ஆக்‌ஷன் ஸ்டைல் நிறைந்த படத்தில் நடித்து உள்ளார். 


அந்தவகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற அதிரடித் த்ரில்லர் திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தில் மூர்க்கையன் என்ற பெயருக்கு ஏற்றவாறே முதல் காட்சி முதல் கிளைமேக்ஸ் காட்சி வரை கோபக்காரனாக நடித்து மிரட்டி உள்ளார் நடிகர் அருள்நிதி. 

இயக்குநர் கெளதமராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களைக் கடந்து விட்ட நிலையில் இதுவரை ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகியும் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இல்லாததால், நாளுக்கு நாள் வசூல் குறைந்த வண்ணமே இருக்கின்றது.

Advertisement

Advertisement