சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலிற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. இதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆதிரை காதலித்த அருணை விடுத்து கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்த இயக்குநரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக எதிர்நீச்சல் உள்ளது.
இந்த சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சாணக்கியா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் முதலில் அறிமுகமானவர். இதனையடுத்து சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
இந்நிலையில் தற்போது சாணக்யாவின் அம்மா-அப்பா குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது அவரின் அம்மா- அப்பா இருவரும் பிரபலமான நடிகர்கள் தான். அம்மா பெயர் கீதா சரஸ்வதி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'பிரியமான தோழி' சீரியலில் நடித்திருக்கிறார். அத்தோடு வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
அதேபோன்று அவருடைய அப்பா மலையாள படங்களில் நடித்திருக்கின்றார். அத்தோடு சமீபத்தில் அவர் நடித்த வெப்சிரீஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது.
Listen News!