இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் யானை. இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. யானை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண் விஜய்க்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
யானை படத்தை தொடர்ந்து அடுத்ததாக அருண் விஜய் நடித்துள்ள வெப்சீரிசான தமிழ் ராக்கர்ஸ் தொடரும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ள முதல் வெப் தொடரான இது ஆகஸ்ட் 19 ம் தேதி வெளியாக உள்ளது. ஏஇதற்கு முன், சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்த ஓ மை டாக் படத்தில் அருண்விஜய் தனது மகன் அர்னவ் விஜய் மற்றும் அப்பா விஜயக்குமாருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் ஓடிடி.,யில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் 'யானை' திரைப்படத்தை இந்தியில் உருவாக்க முடிவு செய்தால் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி தான் இயக்க வேண்டும் என்று அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த படத்தை அவரை தவிர வேறு யார் இயக்கினாலும் நன்றாக இருக்காது என்றும் அவர் மிக அற்புதமான இயக்குநர் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நானே நடித்தால் எனக்கு ஜோடியாக ஷரதா கபூர் நடிக்க வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே அருண் விஜய் மற்றும் ஷரதா கபூர் ஆகிய இருவரும் பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அன்றைய சரித்திரம், அதை நினைவுறுத்துவோம்!- மீண்டும் இணையும் கமல் – உதய நிதி கூட்டணி
- நடிகர் பகத் ஃபாசிலுக்கு நஸ்ரியா வைத்த செல்லப் பெயர் இது தானா?-இன்ஸ்டா ஸ்டோரியால் வெளிவந்த தகவல்!
- படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் என் நெருங்கிய தோழி ஆகிவிட்டார்’- பிரபல நடிகையைப் புகழ்ந்த தனுஷ்
- இரண்டாவது முறையாக புதிய மாடல் காரை வாங்கிய ஜிபி முத்து – அடடே இது இத்தனை கோடி பெறுமதியானதா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!