பலர் பல கனவுகளோடு சினிமாவில் நடிக்க வந்திருந்தாலும் அதில் ஒரு சில பேர் மட்டும் தான் அவர்களின் விடாமுயற்சியால் நிலைத்து நிற்கிறார்கள். அதில் அருண் விஜய் 90ஸ் காலத்தில் இருந்து இப்பொழுது வரை நிறைய போராட்டங்களை சந்தித்து எப்படியாவது ஒரு முன்னணி ஹீரோவாக வர வேண்டும் என்ற முழு முயற்சியுடன் நடித்து வருகிறார்.
இவருக்கு இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதலில் இந்த படத்தில் சூர்யா தான் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தார்.பின்பு அவருக்கும் இயக்குநர் பாலாவுக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
அதன் பின் இந்த வாய்ப்பு அருண் விஜய்க்கு கிடைத்தது. இதனைக் கேட்ட அருண் விஜய் தலைகால் புரியாமல் வானத்துக்கு பூமிக்கும் குதித்து, ஓகே இந்த படத்தின் மூலமாக நாம் ஒரு பெரிய இடத்திற்கு வந்திரலாம். ஏனென்றால் பாலா படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதற்காக வணங்கான் படத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
பிறகு இதனைத் தொடர்ந்து வணங்கான் படப்பிடிப்பு நல்லபடியாக ஆரம்பித்து 25 நாட்கள் சூட்டிங் கன்னியாகுமரியில் எடுத்து முடிக்கப்பட்டது. இதன் முதல் பகுதி நல்லபடியாக முடிந்தாலும் அதில் அருண் விஜய் ஒருவித பதற்றத்துடன் இருந்திருக்கிறார்.ஏனென்றால் இந்த மொத்த படப்பிடிப்பிலும் அருண் விஜய் அவருடைய இயல்பான கேரக்டரில் இல்லாமல் சற்று வேற மாதிரியாக இருந்திருக்கிறார்.
ஷூட்டிங் நேரத்தில் எப்பொழுதுமே கோபமாகவும் எரிச்சலுடன் தான் இருக்கிறாராம். அதனால் அருண் விஜய் இவரிடம் பேசுவதற்கே பயந்து போய் அமைதியாகவே நடித்துக் கொடுத்து வருகிறார்.
அத்துடன் மேக்கப் மேன், டச் ஆஃப் பாய் போன்ற ஆர்டிஸ்ட்களிடம் கூட என்னிடம் நெருங்காதீர்கள் பாலா பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று அவர்களையும் நெருங்கி விடுவதில்லை. ஆனால் இவருடைய கேரக்டர் எப்பொழுதுமே எல்லோரிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பது தான். இப்பொழுது பாலாவால் இந்த மாதிரி ஆகிவிட்டார். இதுவே அருண் விஜய்க்கு ஓவர் டார்ச்சர் ஆக இருக்கிறது. ஆனாலும் இந்த படத்தின் மூலம் நாம் பெரிய ஹீரோவாக ஆகிவிடலாம் என்று நினைத்து இந்த மாதிரி கஷ்டங்களை அனுபவித்து படாத பாடு பட்டு நடித்து வருகிறார்.
Listen News!