• Nov 20 2024

குழந்தைகளுடன் குழந்தையாக பிறந்தநாளைக் கொண்டாடிய அருண் விஜய்-அந்த மனசு தான் சார் கடவுள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு... அறிமுகமானாலும், பின்னர் தன்னுடைய திறமையால், சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்துத் கொண்டிருப்பவர் தான் அருண் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக யானை என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.


தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, இருக்கும் நடிகர் என்று அழைக்கப்படும் இவர் இன்றைய தினம் 45வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.


இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது மகன், மகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். குழந்தைகள் முன்பு கேக் வெட்டி அவர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.


பின்னர் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்... அவர்களுடன் சேர்ந்து மதிய உணவை சாப்பிட்டார். முன்னணி நடிகராக இருந்தும் இவர் மிகவும் எளிமையாக பழகி, சின்னசிறு குழந்தைகளுடன் உணவு அருந்தியது பார்பவர்களையே ஆச்சரியப்படுத்தியது.


அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு தானும் இரத்த தானம் செய்தார் இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement