கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் தான்'மஃப்ட்டி' இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பத்து தல என்னும் படத்தில் சிம்பு நடித்து வருகின்றார். இவருடன் இப்படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.
பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐதராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.
தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்து தல படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியை களமாக கொண்டு டீஸர் அமைந்துள்ளது. AGR எனும் மணல் மாஃபியாவாக சிம்பு நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே இந்த படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயீஷா கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியருக்கு குழந்தை உள்ள நிலையில், இவர்கள் இருவரும் திருமணத்துக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!