• Sep 21 2024

அண்ணன் தங்கையாக நடிக்க இருந்த ஆர்யா மற்றும் நயன்தாரா- அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சுந்தர். சி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் ஆர்யா. இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ராஜா ராணி. இப்படத்தில் இவருடன் ஜெய் நயன்தாரா நஸ்ரியா ஆகியோரும் நடித்திருந்தனர். அத்தோடு இப்படத்தினை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார் என்பதும் அறிந்த விடயமே.

இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஆன் ஸ்க்ரீன் ஜோடியாக ஆர்யா மற்றும் நயன்தாரா காணப்படுகின்றனர். இந்நிலையில், இவ்விருவரும் முதல் முறையாக இணைந்து அண்ணன் தங்கையாக நடிக்கவிருந்தார்களாம்.

அதாவத சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த அரண்மனை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா மற்றும் ஆர்யா தானாம்.

சுந்தர்.சி நடித்த கதாபாத்திரத்தில் ஆர்யாவும், அவருக்கு தங்கையாக நடித்த ஆண்ட்ரியா கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்கவிருந்தார்களாம். ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாக இயக்குநர் சுந்தர்.சி வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement