• Sep 22 2024

சியான் 61 படத்தின் பூஜைக்கு செம மாஸாக வந்த ஆர்யா- விஜய்யை போஃலோ பண்ணுறார் போல

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா. ரஞ்சித்துடன் நடிகர் விக்ரம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பானது இன்றைய தினம் பூஜையுடன் ஆரம்பமாகியது.ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு தற்காலிகமாக மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இவர் நடித்துள்ள மற்றுமொரு திரைப்படமான கோப்ரா படத்தின் இசைவெளியீட்டானது அண்மையில் தான் நடந்து முடிந்தது.தமிழகத்தில் இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யவுள்ளது.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் விக்ரம். சியான் 61 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமான அளவில் போடப்பட்டது. அதிக பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியிட தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த பூஜைக்கு நடிகர் ஆர்யா வித்தியாசமான வகையில் சைக்கிளில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நடிகர் சிவக்குமாரும் விழாவில் கலந்துக் கொண்டார். சைக்கிளில் வருவதை நடிகர்கள் தொடர்ந்து ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement