சிம்பு நடிப்பில் மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பத்து தல'. இப்படம் இந்த மாதம் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.ஏ.ஜி.ஆர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்புவுக்கு தங்கையாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். அதே போல் கெளதம் மேனன், அணு சித்தாரா, போன்ற பலர் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என இன்று இரவு 10 மணிக்கு தெரிவிக்கப்பட உள்ள நிலையில், சிம்பு 'பத்து தல' படத்தின் ஆடியோ வெளியீட்டு பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.
மேலும் சிம்புவின் ரசிகர்கள் அலைகடல் போல், நேரு உள்விளையாட்டு அரங்கில் கூடி உள்ளனர். பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் இசை வெளியீட்டு விழா துவங்கியுள்ள நிலையில்... இப்படத்தில் நடிகை சாயிஷா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
நடிகை சாயிஷா, திருமணத்திற்கு பின்னர் கமிட் ஆன படங்களில் மட்டுமே நடித்த நிலையில், பின்னர் திரையுலகில் இருந்து விலகி, குழந்தை பெற்று கொண்டு குடும்பம் கணவர் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'பத்து தல' படத்தில் ஐட்டம் டான்சில் இறங்கி குத்தியுள்ளார்.
கெளதம் கார்த்தியுடன் இவர் டான்ஸ் ஆடிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள், புஷ்பா முதல் பாகத்தில்... ஐட்டம் டான்ஸ் ஆடிய சமந்தாவுக்கே டஃப் கொடுக்கிறாரா சாயிஷா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Listen News!