• Sep 20 2024

ஒரு இடத்தில் நிற்காமல் துள்ளும் ஆர்யாவின் மனைவி... அதுவும் பல வண்ண உடைகளில்.. கலாய்க்கும் ரசிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பிற்கும், நகைச்சுவை கலந்த பேச்சிற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் இவருக்கு ஆண்களை விட பெண் ரசிகர்களே அதிகமாக உள்ளனர்.


இவர் 'அறிந்தும் அறியாமலும், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், டெடி, சார்பட்டா பரம்பரை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவற்றை போன்றே இவரின் நடிப்பில் உருவான ஒரு படம் 'கஜினிகாந்த்'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்திருந்தார். 

இப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாயிஷாவுடன் ஆர்யாவிற்கு காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு இரு வீட்டு சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் இவர்களுக்கு சென்ற வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தை பிறந்தமையை தொடர்ந்து எந்த திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்து வருகின்றார் சாயிஷா. இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகின்றார். 


இந்த நிலையில் தற்போது தனது வீடியோ ஒன்றினைப் பதிவிட்டிருக்கின்றார். அதில் இவர் பல வண்ண உடைகளை அணிந்து ஒரு இடத்தில் நிற்காது துள்ளிக் குதித்த வண்ணம் இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்களுக்கு என்ன ஆச்சு" எனக் கிண்டலாக கேட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement