தமிழ் சினிமாவில் 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் கெளதம் வாசுதேவ் மேனன். இதனைத் தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இவருடைய படங்கள் பெரும்பாலும் காதலை மையப்படுத்தியதாகவே இருக்கும்.இது தவிர கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு'.
இப்படத்தில் நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ராதிகா, சிதி இட்னானி, நீரஜ் மாதவ், அப்புக்குட்டி, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் ஐம்பது நாட்களை கடந்து பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றிருந்தது. இந்த நிலையில், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் தனது கல்லூரி காதலை நினைவலைகளை பகிர்ந்தார்.அதாவது "தனுஷ் சொன்ன மாதிரி இந்த சூப் பாய்ஸ் Categoryல தான் நாங்க எல்லாம் வருவோம்னு நினைக்கிறேன். ஒரு பொண்ணை புடிக்கும். அவங்க கூடயே 2 வருஷம் இருந்துட்டு அவங்க கையை கூட பிடிக்காம தான் லவ். இந்த பீலிங் எல்லாம் இருந்தது. அவ கூட வாழ்க்கை பூரா இருக்கணும்னு தோணும்.
ஆனா அவங்களுக்கு அது தோணல. ஒரு பாயிண்ட்டுக்கு மேல அவங்க வந்து, 'நீ என் கைய கூட புடிக்கல' அப்படிங்குற மாதிரி ஒன்னு சொன்னாங்க. அதுல ரொம்ப ஒரு மாதிரி பாதிப்படைஞ்சேன்னு சொல்லணும். அதுக்கப்புறம் மீட் பண்ண ஒரு பொண்ணு, அவங்களோட ஒரு நாலஞ்சு வருஷம் இருந்தேன். இந்த கைய கூட புடிக்கலைன்னு அவங்க சொல்லக்கூடாதுன்னு அதுக்கான முயற்சி எடுத்தேன்.
ஆனா, அதே நேரத்துல நீங்க யார் கூட பூரா வாழ்க்கை வாழ போறீங்களோ, அவங்க நமக்கு தெரியாம நம்ம பக்கத்துல இருப்பாங்க அப்படின்னு ஒரு விஷயம் எனக்கு ஒரு பாய்ண்ட்டில் பட்டது. அதுக்கப்புறம் அவங்க கூட லைஃப்ல செட்டில் ஆயிட்டேன்னு தான் சொல்லணும்" என கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார்.
Listen News!