தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தை அடைந்து கொள்வதற்காக சிட்டாக பறந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தமிழில் 'டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது பிரியங்கா மோகன் தற்போது ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் சினிமாவில் அடுத்த நயன்தாராவாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றார்கள். எனினும் காலம் என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறாக பல ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'ஜெயிலர்' என்ற திரைப்படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அத்தோடு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் முனைப்பு காட்டியும் வருகிறார்.
பிரியங்காவின் நடிப்பினைத் தாண்டியும் அவரின் அழகிற்கு பல இளைஞர்கள் அடிமை என்று சொல்லலாம். இவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களை ரசிப்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.
அந்தவகையில் தற்போதும் பிங்க் கலர் உடையணிந்து க்யூட் லுக் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்திருக்கின்றார்.
Listen News!