தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் மாதவன். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இப்படமானது இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்து.
அத்தோடு இப்படததைின் படப்பிடிப்பானது இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் மாதவன் 79 வயது நம்பி நராயணனாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
நம்பி நாராயணனாக நடித்துள்ள மாதவன் 79 வயதான நம்பி நாராயணனின் தோற்றத்தை அடைய மேக்கப், பல், முக அம்சங்களையும் கூட மாற்றினார். நாராயணனின் 29 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பங்களை இப்படம் சொல்வதால், தனது கதாபாத்திரத்தை வெவ்வேறு காலகட்டங்களில் சித்தரிக்க உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் உள்ளார் மாதவன்.
இப்படத்தில் நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அதாவது நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் துணிச்சல் மிகுந்த செய்தியாளராக நடித்துள்ளார். படத்தில் "ஒரு நாயை அடித்து கொல்லனும்னு முடிவு பண்ணிட்டா அதுக்கு வெறிநாய்னு பட்டம் கொடுத்தால்'' என்று அவர் பேசிய வசனம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கேரக்டரில் கடைசி ஐந்து நிமிடம் மிரட்டிய சூர்யா கதாபாத்திரம் போல இந்த கதாபாத்திரும் பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நான் சும்மா குடும்பத்துடன் சென்னைக்கு வந்திருக்கேன் அவ்ளோதான்- யானை படத்தை பார்த்த ரம்பா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
- தந்தையின் பிறந்தநாளுக்கு போகாத விஜய்- கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட அவரது அம்மா ஷோபனா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!