நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இயக்குநர் லோகேஷ கனகராஜ் இயக்கத்தில் உருவாகுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.இப்படத்தைத் தொடரந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகின்றார்.லியோ படம் ரிலீஸானவுடன் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.
விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபகாலமாக விஜய் சங்கீதாவைப் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகின்றது.ஆனால், சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் பொய்யாக தான் இருக்கிறது என மாணவர்கள் சந்திப்பில் விஜய் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யாவுடன் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்திற்கு விஜய் சென்றுள்ளார்.அந்த திருமணத்தில் விஜய்யின் மகள் திவ்யா நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Woww Rare video of Thalapathy Family....Divya Sasha Dancing 🤌🏻🧿😘♥️ he is really enjoying her Dance..... ❤️🔥#Leo #Thalapathy68 pic.twitter.com/TNZP79aaJY
Listen News!