உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஜூன் 3இல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிடோரும், கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் வசூலில் பிளாக் பாஸ்டர் சாதனைகளை படைத்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், படத்தை வெளியிட்ட உதயநிதி,செண்பக மூர்த்தி, கோகுலம் சினிமாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் 40 வகையான விதவிதமான உணவுகளுடன் விருந்து அளிக்கப்பட்டது. விருந்தின் மெனுவில், நாட்டுக் கோழி சூப், முருங்கைக்கீரை சூப், மாம்பழ ரோல்,லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கைமா உருண்டை, சிக்கன் பிச்சுபோட்ட வறுவல், வஞ்சிரம் மீன் வறுவ,ல் இறால் தொக்கு, மட்டன் சுக்கா,சோளா சோர்ஸ் உருண்டை, பன்னீர் டிக்கா, மெக்ஸிகேன் டாகோஸ், ஜலபேநோ சீஸ் சமோசா, ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, ரைதா, விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிபாளையம் கிரேவி, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசாலா தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால், ஐஸ்கிரீம், நறுக்கிய பழங்கள், பீடா என 40 வகையான உணவுப் பதார்த்தங்கள் இடம் பெற்றன.
இந்த விருந்தில் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் ,அனிருத், உதயநிதி உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று சாப்பிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விக்ரம் படம் இதனால் தான் வெற்றி பெற்றது- உண்மையை வெளிப்படையாகக் கூறிய கமல்ஹாசன்
- தூக்கமில்லாமல் தவித்த நடிகை சமந்தா-இது தான் காரணம்..!
- சங்கர் படத்தில் இணையவுள்ள விஜய் சேதுபதி-அதுவும் எந்த காரெக்டரில் தெரியுமா..?
- சங்கர் படத்தில் இணையவுள்ள விஜய் சேதுபதி-அதுவும் எந்த காரெக்டரில் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!