• Nov 17 2024

விக்ரமனுடன் முட்டி மோதும் அசீம்.... பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மூண்ட சண்டை... வெளியானது அனல் பறக்கும் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் 5ஆவது வாரத்தை நகர்ந்து சென்ற வண்ணம் இருக்கின்றது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் மட்டும் தான் நாம் காதல், சண்டை, ரொமான்ஸ் என அனைத்து விதமான உணர்வுகளையும் பார்க்க முடிகின்றது.


இன்றைய நாளிற்குரிய இரண்டாவது ப்ரோமோவிலே விக்ரமன் மற்றும் அமுதவானன் இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அதாவது நீங்க ஒண்டு சொன்னா ஜாலி எடுத்துக்கிறீங்க...அதே நான் ஒன்று சொன்னா அதை சீரியஸா எடுத்து பிரச்சனை பண்ணுறீங்க என அமுதவாணன் கத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் அசீமிற்கும், விக்ரமனிற்கும் சண்டை ஏற்படுகின்றது. அதாவது அதில் அசீம் "ஓனர் தனியாக எல்லாம் முடிவெடுக்க முடியாது, வேர்க்கெஸ் சொன்னால் ஓனர் கேட்கணும்" என கோபத்தில் கத்துகின்றார். 

அதற்கு உடனே விக்ரமன் "எதுக்கு இப்பிடி வாய்ஸ் விட்டு கத்துறாய்" எனக் கேட்கின்றார். இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் மகேஸ்வரி. இருந்தாலும் வழமை போன்று "தன் மேல் தான் பிழை" என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு அமைதியாக விலகி செல்கின்றார் விக்ரமன்.

அதனைத் தொடர்ந்து "நான் இந்த டீமை விட்டு விலகிறேன்" எனக் கூறி விட்டு செல்கின்றார் அசீம். இவ்வாறாக பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement