விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்-6. கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதியல் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் 11போட்டியார்கள் மட்டுமே உள்ளார்கள்.
இதில் இந்த வாரம் யார் வெளியேறப்போறார்கள் என ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இதுவரை பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மணிகண்டன் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
நரகம் சொர்க்கம் என இரண்டு டீமாக பிரிக்கப்பட்டு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகின்றது.அதில் நரகத்தில் அதிக நேரம் பெடலிங் செய்தவர் சொர்க்கத்திற்கும் சொர்க்கவாசிகள் கலந்து பேசி அவர்களில் ஒருவரை நரகத்திற்கும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் அசீம் அமுதவாணனை வம்பு இழுப்பதற்காகவே ஒரு டாப்பிக்கை முன்வைக்கின்றார்.அதாவது...அமுதவாணனுக்கு தனலட்சுமியும் ஜனனியும் க்ளோஸ் ப்ரண்ட் தானே...வேபர் ஆனவங்களுக்கே சைக்கிள் சான்ஸ் கொடுத்தா மற்றவங்களுக்கும் வரணும் எல்லோ என்று கேள்வி கேட்க அமுதவாணன் இடையில் நுழைந்து..ஒரு நிமிசம் இரு நான் கொடுத்தனா என கோபத்தில் கேட்க மணிகன்டனும் இல்லை என்று கூறி விடுகின்றார்.
அதன் பிறகு பேசிய தனம்..அமுதவாணன் வாய்ப்பு கொடுத்ததை பார்த்தீங்களா அசீம் எனக் கேட்கின்றார்.அசீம் கத்த அமுதவாணனும் கோபத்தில் தனது கருத்தை முன்வைக்கின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.இதோ அந்த ப்ரமோ...
Listen News!