விஜய் டிவியில், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இதுவரை, ஒளிபரப்பான ஐந்து சீசன்களையும் தூக்கி சாப்பிட்டது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி எனலாம்.
ஆரம்பமான ஒரு வாரம் மட்டுமே குறைவான சண்டைகளுடன் நகர்ந்த நிகழ்ச்சி, முடிவை எட்ட சில நாட்கள் இருக்கும் வரை பரபரப்பாக போட்டியாளர்கள் கத்திக் கொண்டே இருந்தனர்.இதுவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மீது சிலருக்கு வெறுப்புணர்வை தூண்ட காரணமாகவும் இருந்தது. எனினும் இந்த நிகழ்ச்சியில், கடைசிவரை தன்னை விமர்சித்தவர்களை பொறுமையாக கையாண்ட விக்ரமன் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு, சற்றே திமிராக நடந்து கொண்ட அசீம் வெற்றியாளராக வாகை சூடினார்.
இது பலரையும் வியப்படையச் செய்தாலும், அசீமுக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்ததே இவரின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. இவர் அவற்றி பெற்றாலும் பலவாறு விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது தனது பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இப்படியான நிலையில் அசீம் பிரபல மேக்கப் ஷோ ஒன்றில் கெஸ்டாக கலந்து கொண்டிருக்கின்றார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.அத்தோடு அசீமுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!