• Sep 20 2024

நடிகையிடம் ஒரு செருப்புக்காக சண்டை போட்ட அசீம்- உண்மையை உடைத்த நடிகை சுபத்ரா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.அடிக்கடி ஹவுஸ்மேட்ஸ் தமக்குள் மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர்.

சில போட்டியாளர்கள் மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை கூட யோசிக்காமல் ஒருவருக்கொருவர் முட்டி மோதி கொண்டு விளையாடி வருவதையும் பார்க்க முடிகிறது. அதே நேரம் சில போட்டியாளர்கள், சற்று அமைதியாக சேஃப் கேம் விளையாடியும் வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறிவிட்டார்கள்.இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் குயின்சி வெளியேறிவிட்டார் என நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளது.

இப்படியிருக்கையில் அசீம் என்னதான் பல போட்டியாளர்களிடம் சண்டைப்போட்டாலும் அவரது ரசிகர்கள் அனைத்து வாரத்திலும் ஆதரவாக வாக்குகளை குவித்தும் நல்ல கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.


இந்நிலையில் அசீம்-ன் உண்மையான முகம் இதுதான் என்று அவருடன் சீரியலில் நடித்த நடிகை சுபத்ரா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பூவே பூச்சூடவா என்ற சீரியலில் அசீம் நடித்த போது நடிகை தேவிப்பிரியாவுடன் ஒரு நாள் செருப்புக்காக பயங்கராமாக சண்டைப்போட்டுள்ளார் என்றும் அசீமிடம் கைநீட்டி பேசியால் கோபமாகிவிடுவார் என்றும் கூறியுள்ளார்.அதுதான் உண்மையான அசீம் என்று சுபத்ரா பல விசயங்களை கூறியுள்ளார்.


Advertisement

Advertisement