• Nov 10 2024

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமண மேக்கிங் வீடியோ- எப்படி ரெடி ஆகிறாங்க என்று பாருங்க...

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக அசத்தி வந்த அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர்  அன்பிற்கினியாள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனை அடுத்து பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் நடிகர் அசோக் செல்வனை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் திருநெல்வேலியில் பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது.திருநெல்வேலியில் நடந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், சினிமா பிரபலங்களாக சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர்.


 சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், கவின் உள்ளிட்ட ஏராளமான சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் என பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நீலக்கலர் கோட் சூட்டில் அசோக் செல்வனும் அவருக்கு மேட்ச் ஆக ப்ளூ கலர் கவுன் அணிந்து தேவதை போல கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜொலித்தார். ஓவராக மேக்கப் போட்டது போல தெரியக்கூடாது என்பதற்காக சாஃப்ட் நேச்சுரல் மேக்கப்பை கீர்த்தி பாண்டியன் போடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 


மேக்கப் போடுவதற்காக கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் அணிந்திருந்த உடையிலும் தமிழில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement