தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அசோக் செல்வன். இவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூது கவ்வும்' படத்தின் மூலம் ஒரு நடிகராக அறிமுகமானவர். இப்படத்தினையடுத்து 'பீட்சா 2 வில்லா', தெகிடி, சவாலே சமாளி, 144, மன்மத லீலை, ஹாஸ்டல், கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், போன்ற பல படங்களில் நடித்தார்.
இவ்வாறாக பல படங்களிலும் கமிட்டாகி தனது திறமையை வெளிப்படுத்து வரும் அசோக் செல்வன், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய அருண் பாண்டியன் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை இன்றைய தினம் திருமணம் செய்துள்ளார்.
இந்தத் திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமணத்தில் பரிமாறப்பட்ட பசுமை விருந்து மெனு லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்தவகையில் "மேங்கோ ஸ்வீட் பொங்கல், இருட்டுக்கடை அல்வா, இளநீர் புட்டிங், நார்த்தங்காய் இஞ்சி பச்சடி, வெண்டைக்காய் தயிர் பச்சடி, மரவள்ளி கிழங்கு வடை, பருத்திப்பால் பாயாசம், பீட்ரூட் சந்தகை-மாப்பிள்ளை சொதி, பலாகாய் கறி - வாழக்காய் பூரி, இட்லி, நீர் தோசை, ராகி அடை, திணை பொங்கல், கதம்ப சாம்பார், தேங்காய் சட்னி, நெல்லிக்காய் சட்னி, கொள்ளு சட்னி, புளி மிளகாய், கிடரங்காய் தொக்கு என்பன பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Listen News!