விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய 7ஜி சீரியல் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி மோகினி என்னும் சீரியலில் நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் ஸ்ரீநிதி. இவர் கடந்த சில நாட்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
இந்நிலையில் அண்மையில் நடிகர் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அத்தோடு கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றெல்லாம் பதிவிட்டிருந்தார் ஸ்ரீநிதி.
இது குறித்த ஸ்கீரின் ஷாட்டை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, ‘என்னிடம் சிம்பு குறித்து கேட்பதற்கு பதிலாக ஏன் நீங்கள் அனைவரும் என்னை பற்றி அவரிடம் கேட்கமாட்றீங்க. நான் பொய் சொல்லவில்லை. சமூக வலைதளத்தில் நான் உண்மையாக இருக்கிறேன். அவரை பற்றி எந்த பேட்டியையையும் நான் கொடுக்க மாட்டேன். அவரே கொடுக்கட்டும். என்னை விட்டுவிட்டு அவரை கேளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீநிதி.
ஸ்ரீநிதியின் இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். எங்க தலைவன் இப்போ தான் சர்ச்சை எதுவும் இல்லாம, நிம்மதியா இருக்காரு. அது உங்களுக்கு பொறுக்கலையா? பேமஸ் ஆக எவ்வளவோ வழி இருக்கு. ஒருத்தரை டேமேஜ் பண்ணி தான் பேமஸ் ஆகணுமா? என கண்டமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில்:
- மங்காத்தா ரோலில் மீண்டும் நடிக்கும் அஜித்- 61வது படத்திலிருந்து கிடைத்த புதிய மாஸ் அப்டேட்
- உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் டான் பட மாஸ் வசூல் வேட்டை-வெளியானது முழு விபரம்..!
- இரண்டு பாகங்களாக உருவாகும் வெற்றிமாறனின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
- கே.ஜி.எப் பட ஹீரோ யாஷின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?
- kpy குரேஷியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…இதோ புகைப்படம்..!
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!