• Sep 21 2024

44 வயதில் கம்பேக்கா-ரசிகரின் கேள்விக்கு நச் என பதிலளித்த நடிகை பூஜா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா.மேலும் இவர் தல அஜித்துடன் அட்டகாசம், மாதவனுடன் ஜே ஜே, ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவுரு் இலங்கையை சேர்ந்தவராக இருந்தாலும் உலகெங்கும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

பூஜா நடித்ததில் பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.மேலும் இப்போதும் பூஜா படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ரசிகர்களும் உள்ளார்கள். பூஜா இலங்கையிலும் நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.

அத்தோடு டுவிட்டரில் ஆக்டீவாக இல்லாத நடிகை பூஜாவை சிலர் நினைவுகூர்ந்து அவருக்காக போஸ்ட் போட அதைப்பார்த்த நடிகை பதில் அளித்துள்ளார். அதில் நான் டுவிட்டரில் ஆக்டீவாக இல்லை ஆனால் என்னை நினைவுகூர்ந்ததற்கு நன்றி என தெரிவித்தார்.

இன்னொரு ரசிகர் மீண்டும் நடிப்பது குறித்து கேட்க அதற்கு பூஜா, 44 வயது ஆகிறது இப்போது போய் கம்பேக் கொடுப்பதா என டுவிட் செய்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement