கார்த்தி சிவகுமார் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பருத்தி வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்,எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்ற விருதுகள் வென்றார்.
மேலும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார்.
இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து இப்படமும் அவருக்கு நல்ல ஹிட் படமாக அமைந்துள்ளது.
பட வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு வெற்றிவிழா எல்லாம் நடத்தினார்கள். இந்நிலையில் 12 நாள் முடிவில் படம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கு வசூலித்துள்ளதாம்.
Listen News!