• Sep 21 2024

3 நாள் முடிவில் அருண் விஜய்யின் படம் செய்த மொத்த வசூல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய்.

இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் யானை. இயக்குநர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, போஸ் வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

மேலும் ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து இருக்கிறது.

பல முறை இந்த படத்தின் வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்த நிலையில் ஒருவழியாக இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை தான் வெளியாகி இருந்தது

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஹரி இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. 3 நாள் முடிவில் இப்போது வரை படம் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement