சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தமிழக வசூல் விபரம் வெளியாகி உள்ளது.
சிம்பு ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான படம் ‘வெந்து தணிந்தது காடு’. 'மாநாடு' படத்தின் பிரம்மாண்ட கம்பேக்கிற்கு பின்னர் கெளதம் மேனன் இயக்கத்தில் இந்தப்படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த வியாழக்கிழமை வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் முத்து என்ற முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் சிம்பு. சித்தி இட்ஞானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் வேற லெவலில் இருப்பதாகவும், சிம்புவின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும், கெளதம் இயக்கத்தில் இந்தப்படம் வித்தியாசமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தற்போது படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் படக்குழு வெற்றிவிழாவையும் கொண்டாடிவிட்டார்கள்.
அந்நிகழ்ச்சியில் தான் பட்ட கஷ்டங்களை சிம்பு பேச அனைவருமே பாராட்டினார்கள்.மேலும் இப்படம் 5 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 37 கோடி வரை வசூலை எட்டிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!