• Sep 21 2024

8 நாள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த வசூல் விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணியில் இருப்பவர் தான் நடிகர் பார்த்திபன்.

இவர் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்த படங்களை இயக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அப்படி அவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான திரைப்படம் இரவின் நிழல். இப்படத்தில் பார்த்திபன் கொஞ்சம் வித்தியாசமான விஷயங்களை கையாண்டுள்ளார்.

ஆனால் சில விமர்சகர்கள் அப்படி ஒன்றும் படத்தில் வித்தியாசம் இல்லை என சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படம் வெளியான நாள் முதல் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. 8 நாள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement