கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் பின்னர் கார்த்தி கிராமத்து கதைக்களத்தில் நடித்த திரைப்படம் தான் விருமன். இப்படத்தில் கதாநாயகியாக ஷங்கரின் மகள் அதிதி நடித்திருந்தார்.இது தான் இவருடைய முதல் படம் என்பதும் முக்கியமாகும்.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளியாகிய இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.
அத்தோடு இப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
மிரட்டலான கதைக்களத்தில் வெளிவந்த விருமன் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதுவரை கார்த்தி நடித்த எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை விருமனுக்கு கிடைத்துள்ளது.
அத்தோடு கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த விருமன் திரைப்படம், தற்போது நான்கு நாட்கள் முடிவில் சுமார் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.
Listen News!