• Sep 20 2024

முதல்வார முடிவில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளிநாட்டில் பெற்ற வசூல் இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


குட்டி ,உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் தனுஷ் நான்காவது முறையாக கைகோர்த்து உருவாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். 

கடந்த வெள்ளிக்கிளமை வெளியாகியிருந்த இப்படத்தில்  ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் சிறப்பு.இப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதேபோல் UAEல் முதல் வார முடிவில் படம் ரூ. 1.55 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

அங்கேயும் வரும் நாட்களில் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.இதனால் படக்குழுவினர் குஷியடைந்துள்ளதோடு தனுஷ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement