• Sep 20 2024

மூன்று நாட்கள் முடிவில் தனுஷின் திருச்சிற்றம்பலம் செய்துள்ள வசூல் விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநரான மித்ரன் ஆர் ஜவகர், இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷு கண்ணாவும், பிரியா பவானி சங்கரும் நடித்திருந்தனர். அதேபோல் தனுஷின் தோழியாக நித்யா மேனன் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.


மேலும்  இதுதவிர பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, முனீஸ்காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். அத்தோடு இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் தான் எழுதி இருந்தார்.

வெளிவந்த நாளிலிருந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது திருச்சிற்றம்பலம்.


இந்நிலையில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அத்தோடு  உலகளவில் ரூ. 32 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. 


Advertisement

Advertisement