• Sep 20 2024

இரண்டு நாள் முடிவில் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் -வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன். ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 15ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இரவின் நிழல்.

இப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் Nonlinear-ஆக எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.அத்தோடு ஒரு கலைஞன் இதுபோல் படம் எடுத்தது சாதனை தான் என பாராட்டுகிறார்.

இத்திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ. 2 கோடி மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களிலும் படத்திற்கான திரையரங்குகள் அதிகமாகும் என்றும் வசூலும் உயரும் என கணிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement