• Sep 20 2024

டீசர் வெளியீட்டு விழாவில்... திடீரென நடிகையை கட்டியணைத்து முத்தம் கொடுத்த இயக்குநர்... ஷாக்கான படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி. இவர் இயக்கத்தில் தற்போது 'திரகபாதர சாமி' என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கின்றார்.


மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மன்னரா சோப்ரா என்பவர் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் உடைய டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த டீசரை தயாரிப்பாளரான தில் ராஜு வெளியிட்டிருந்தார்.


இந்த டீசர் வெளியீட்டு விழாவில் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சமயத்தில் மன்னரா சோப்ரா பக்கத்தில் இயக்குநர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி நின்று கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அங்கிருந்த அனைவரின் முன்பாகவும் இயக்குநர் நடிகை மன்னரா சோப்ராவிற்கு மேடையில் வைத்து முத்தமிட்டார். 


இந்த சம்பவமானது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது.


Advertisement

Advertisement