• Sep 21 2024

அதென்னா புதுசா தலைவா டே - அடடே இது தான் காரணமா?- சூப்பர் அப்டேட்டை வெளியிடவுள்ள ஏ.எல் விஜய்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீப காலமாக அஜித், கமல், ரஜினி போன்ற பெரிய ஸ்டார்கள் பேசிய அல்லது பேட்டிய அளித்த பழைய வீடியோக்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.இதில் பல வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகின்றது என்பதும் முக்கியமாகும்.

அப்படி தான் இன்று காலை முதலே ட்விட்டரில் #ThalivaaDay என்ற ஹேஷ்டேக் செம டிரெண்டாகி வருகிறது. அதென்னா தலைவா டே என புரியாமல் முதலில் நெட்டிசன்கள் குழம்பிப் போயினர். பின்பு தான் தெரிந்தது விஜய் நடித்த தலைவா படம் ரிலீசான நாள் இன்று என்பதை தான் ரசிகர்கள் இப்படி கொண்டாடி வருகின்றனராம்.

அதாவது இயக்குநர் ஏ. எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு உருவாகி வெளியான திரைப்படம் தான் தலைவா.ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வெளியான இப்படம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

60 கோடி பட்ஜெட்கடில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றது. இப்படத்தில் விஜய், அமலாபால், நிரவ்ஷா, சந்தானம், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்ததோடு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். அவரது இசையில் 6 பாடல்கள், ஒரு தீம் மியூசிக் உருவாக்கப்பட்டிருந்தது.

விஜய்யின் படங்களிலேயே அதிக எதிர்ப்பை சந்தித்த படம் இது தான். படத்தின் டைட்டில் வெளியிட்டதுமே எதிர்ப்பு ஆரம்பமானது.தலைவா படம் ரிலீஸ் செய்யப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி உள்ளனர். ஹேஷ்டேக் மட்டுமல்ல தலைவா டே விற்காக காமன் டிபி ஒன்றையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இன்று மாலை டைரக்டர் ஏஎல் விஜய், தலைவா டே காமன் டிபி.,யை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement