தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த இளம் இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. இவர் 'ராஜா ராணி' என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து பின்னர் விஜய் நடிப்பில் 'தெறி' எனும் படத்தை உருவாக்கியிருந்தார். இப்படம் மாபெரும் ஹிட்டைக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தெறி படத்தைத் தொடர்ந்து இவர் மறுபடியும் விஜய்யை வைத்து 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இப்படங்களும் வெற்றிப் படங்களாக மாறி இவருக்கு புகழையும் வெற்றியையும் தேடிக் கொடுத்திருந்தன.
இந்நிலையில் அட்லீ 'பிகில்' படத்திற்கு பிறகு தற்போது பாலிவுட் ஹீரோவான ஷாருக்கானை வைத்து 'ஜவான்' எனும் படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். இப்படத்தின் உடைய க்ளிப்ம்ஸ் வீடியோ மற்றும் First லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும், பாராட்டுகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் படங்களில் பிஸியாக நடித்து வருவது மட்டுமல்லாமல், ட்விட்டரிலும் அவ்வப்போது தனது படத்தின் முக்கியமான விஷயங்களை பதிவு செய்து வருவது வழமை. இவ்வாறு முக்கியமான விஷயங்களை மட்டுமே பதிவு செய்து வரும் இயக்குநர் அட்லீ, தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Just like tat pic.twitter.com/LNsQDQTgby
— atlee (@Atlee_dir) July 10, 2022
அந்தப் புகைப்படத்தில் கையில் துப்பாக்கியுடன் செம மாஸாக அமர்ந்திருகின்றார் அட்லீ. தன்னுடைய புகைப்படத்தோடு சேர்த்து ட்விட்டரில் 'Just like tat' எனக் குறிப்பிட்டு பதிவு ஒன்றினையும் செய்துள்ளார். இந்த நிலையில் அட்லீ பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வைரலாகி வருகிறது.
பிற செய்திகள்
- ‘விக்ரம்’ சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா?…மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்
- ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம் இத்தனை கோடியா?..வாயைப் பிளந்த ரசிகர்கள்
- விஜய்யின் நான் வாழும் உலகம்; பேரைக் கேட்டாலே ரொம்ப வித்தியாசமாய் இருக்கே!
- கனவுத் தொழிற்சாலையின் ரசிகர்களால் மறக்க முடியாத கனவுக் கன்னி..சிலுக்கு ஸ்மிதா
- நான் படிக்காததால் வாழ்க்கையில் கஷ்டப்பட்டேன்; ரசிகர்களுக்காக மனம் திறந்த அஜித்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!