இயக்குநர் அட்லீயின் முதல் இந்தி படமாக உருவான 'ஜவான்' படம் இன்று வெளியாகி உள்ளது. ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அத்தோடு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்தைக் காண்பதற்காக ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களைக் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்தவகையில் அட்லீ ஜவான் படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் ஜவான் என்ற பெயர் பதிக்கப்பட்ட டீ ஷேர்ட் அணிந்து வந்த அட்லீக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.
இதனையடுத்து அட்லீ தனது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் விவேக் போன்றோருடன் இணைந்து ஜவான் படத்தைக் கண்டுகளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
Listen News!