• Sep 21 2024

திடீரென சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய அட்லி- அடுத்த படத்திற்கு வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லி இயக்கத்தி அனிருத் இசையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான்.விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி ஆகியோர் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 7ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜவான்.இந்தப் படம் உலகம் முழுவதும் 520 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்பெற்று சாதனைப்படைத்துள்ளது.

ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்த இந்தப் படம் முதல் நாளில் 129 கோடி, இரண்டாம் நாளில் 111 கோடி, மூன்றாம் நாளில் 144 கோடி என மூன்று நாட்களில் 384 கோடியைசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


அத்தோடு இப்படம் மூலம் அட்லீயின் மார்க்கெட் எங்கேயே சென்றுவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.பாலிவுட் பக்கம் சென்றதை தொடர்ந்து இப்போது அட்லி டோலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது,அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ஜவான் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அட்லியின் சம்பளம் ரூ. 60 கோடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் இந்த சம்பள உயர்வு விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement