• Nov 14 2024

விஜய் படத்தை ஆட்டையைப் போட்ட அட்லீ... காப்பி சர்ச்சையில் 'ஜவான்'... வைச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தை அட்லி இயக்கி உள்ளார். இதன்மூலம் அவர் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இதில் முதன்முறையாக ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 


மேலும் வில்லனாக விஜய் சேதுபதியும், காமெடியனாக யோகிபாபுவும் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஜவான் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 


இந்நிலையில் இன்றைய தினம் ஜவான் படத்தினுடைய முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் "பல படங்களை காப்பியடித்துத் தான் அட்லீ ஜவான் படத்தை உருவாக்கியிருக்கின்றார்" எனக் கூறி விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் இப்படத்தில் ஷாருக்கான் முகத்தில் பாதி பக்கத்தை முகமூடி அணிந்து மறைத்தபடி இருக்கும் தோற்றம் ஆனது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'அந்நியன்' படத்தினுடைய தோற்றத்தை போல் உள்ளதாக கூறி விளாசி வருகின்றனர்.


அத்தோடு ஜவான் படத்தில் குழந்தையை கையில் ஏந்தியபடி வரும் காட்சி, பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி நடித்த காட்சியை போல் இருப்பதாகவும் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது பாலிவுட் படமாகிய 'டார்க் நைட்' படத்தில் வரும் கெட்-அப்பை போல் உடல் முழுவதும் துணியை சுற்றிக்கொண்டு ஜவான் படத்தில் ஷாருக்கானும் போஸ் கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதேபோன்று "எங்க அம்மாவுக்கு பண்ணிய சத்தியம் தான் நான்" என்கிற டயலாக்கும் Prevue-வில் இடம்பெற்று உள்ளதால், ஷாருக்கானை வைத்து அட்லீ கே.ஜி.எப் படத்தை எடுத்துள்ளாரா..? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேபோன்று விஜய் படத்தையும் ஜவான் படத்தில் காப்பி அடித்திருக்கின்றார் அட்லீ. அதாவது மெர்சல் படத்தில் விஜய் சண்டையிடும் முன் கையை தட்டுவது போன்று ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே கையை தட்டி சண்டைக்கு ரெடியாகும் படியான காட்சிகள் இப்படத்திலும் இடம்பெற்றிருக்கின்றன.


இவ்வாறாக அட்லீயின் 'ஜவான்' படமானது காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளமை குறிப்பிடத்தக்க

Advertisement

Advertisement