கடந்த 2000ம் ஆண்டில் விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் காணும் காலங்கள். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த தொடரானது பள்ளிக் காலத்தை மையப்படுத்தியே கொண்டு வெளியானது.இந்தத் தொடர் பல சாதனைகளை படைத்தது.
இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் பலர், தொடர்ந்து திரைத்துறையிலும், தொலைக்காட்சியிலும் பல வாய்ப்புகளை பெற இந்தத் தொடர் காரணமாக அமைந்தது.இந்தத் தொடர்மூலம் தான் தற்போது அனைவருக்கும் பிடித்தமானவராக பிக்பாஸ் டைட்டில் வின்னராக மாறியுள்ளார்.
தான் கல்லூரியில் போய் படித்ததைக் காட்டிலும் இந்தத் தொடரில் நடித்த ஞாபகங்களே அதிகமாக காணப்படுவதாக அவர் முன்னதாக தெரிவித்துள்ளார். கனா காணும் தன்னைப் போன்ற பலருக்கு இந்தத் தொடர் சிறப்பான களத்தை அமைத்துக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் இந்தத் தொடர் மூலம் பிரபலமான நடிகர் பால சரவணன், தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதேபோல நடிகர் ரியோ ராஜ், விஷ்ணு போன்றவர்களும் இந்த சீரியல் மூலம் தான் பிரபல்யமானார்கள்.
இதனிடையே கடந்த ஏப்ரல் முதல் இந்தத் தொடர் வெப் தொடராக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிரப்பாகி வருகிறது.தற்போது ரசிகர்களை வெப் சீரிஸ் மூலமும் கவர்ந்துவரும் இந்த தொடரின் அடுத்தடுத்த புரோமோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர்களாக ஜெர்ரி, மலர் காணப்படுகின்றனர். இதனிடையே தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் ஜெர்ரி சார் குறித்து பேசும் மாணவிகள், அவரே எல்லா பாடங்களையும் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று பேசுவதாக அமைந்துள்ளது.எல்லாமே ஜாலி தான் என்ற இந்த இசை ஆல்பம் சிறப்பான வகையில் காணப்படுகிறது.மாணவர்களின் சேட்டைகள் உள்ளிட்டவை அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரம்யா பாண்டியனின் கவர்ச்சிக்கு கிடைத்த பலன்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்…!
- சூரியின் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவரது மகனும் நடிக்கின்றாரா?…வெளியான புதிய அப்டேட்
- சைக்கிளிங் மீது காதல் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…வெளியான புகைப்படம்…!
- களை கட்டப் போகும் குக் வித் கோமாளி பினாலே…போட்டியாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் சங்கமிக்கும் தருணம்… வெளியாகிய புரோமோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!