• Sep 20 2024

ஆத்தா மீனாட்சி தைரியத்தை தரவேண்டும் போய் வா தம்பி- நடிகர் வைரவனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் வெண்ணிலா கபடிக்குழு. இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார்.இவர்களுடன்  அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

இவர்களைப் போல இப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் நடிகர் ஹரி வைரவன்.இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும்  நடித்திருக்கிறார்.


இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்ததால் கை, கால் வீங்கியது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன் சில மாதங்களுக்கு முன் 15 நாட்கள் கோமாவில் இருந்தார். பின்னர் குடும்பத்தின் உதவியுடன் வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இருப்பினும் இன்று  நடு இரவில் 12.30 மணியளவில் மரணம் அடைந்துள்ளார்.மதுரையை சார்ந்த ஹரி வைரவன் மரணம் ரசிகர்கள் & சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கடச்சனேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹரி வைரவன் உடல் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஹரி வைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் ஹரி வைரவன் மறைவுக்கு நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளார்.


 அதில், "இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தாருக்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி" என டுவீட் செய்துள்ளார்.


Advertisement

Advertisement