டெம்பிள் மங்கிஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, ஜகன், சாரா, அப்துல் ஆகியோர் நடிப்பில் இன்றைய தினம் வெளிவந்த திரைப்படம் 'பல்லு படாம பாத்துக்க'.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பல பிரச்னைகளுக்கு பிறகு சமீபத்தில் தான் முடிவடைந்து. இப்படத்தைப் பலரும் 18+ எனக் கூறி வந்த நிலையில் இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.
அந்தவகையில் வெவ்வேறு காரணங்களினால் தற்கொலை செய்ய முடிவு செய்து ஆறு பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக கேரளாவில் உள்ள அமானுஷ்ய வனப்பகுதிக்கு வருவதை போல படத்தின் கதை தொடங்குகிறது.
இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள வரும் அவர்களை ஜாம்பிகள் துரத்துகின்றன. அந்த ஜாம்பிகளிடம் இருந்து அவர்கள் தப்பித்தனரா? அல்லது தற்கொலை முடிவை கைவிட்டனரா? என்பதுதான் இப்படத்தினுடைய மீதிக் கதை. மேலும் தற்கொலை செய்து கொண்டால் ஒரே அடியாக போய்விடலாம் ஆனால் ஜாம்பி கடித்தால் ஜாம்பியாக மாறிவிட வேண்டியதுதான் என்ற அடிப்படியில் தான் இப்படத்தினுடைய தலைப்பே அமைந்திருக்கின்றது.
குறை, நிறைகள்
இந்த படம் ஆனது மற்ற ஹாரர் மற்றும் ஜாம்பி படங்களை போல இல்லாமல் இளைஞர்களுக்கான படமாக உருவாகி இருக்கிறது. இப்படம் பார்பபதற்கு குடும்பத்துடன் சென்றால் உங்களுத்தான் சங்கடம் ஏற்படும். அத்தோடு படத்தின் நீளம் 2 மணிநேரம் மட்டுமே இருப்பதால் நேரப் பிரச்சினையில் இந்த படம் தப்பித்து விட்டது.
மேலும் டிஸ்கவரி சேனல், விளம்பங்கள், திரைப்படங்கள் என அனைத்தையும் வைத்து 18+ காமெடி செய்து இப்படத்தில் கலாய்த்திருக்கின்றனர். அதே போல அரசியல் தலைவர்கள் சார்ந்த காமெடிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் இவை எப்படியோ சென்சார் போர்டில் இருந்து தப்பித்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
அதுமட்டுமல்லாது இப்படம் எடுக்க முதலில் திட்டமிட்டது 2018 இல் தான். ஆனால் படம் வெளியாகி இருப்பது 5 வருடங்கள் கழித்து 2023இல். எனவே சில இடங்களில் 5 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் தான் இது என்று அப்படியே தெரிந்தது. அதே போல இப்படத்தில் காமெடியும் அந்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இப்படத்தில் ஹிட்லர் கதாபாத்திரம் ஓன்று வரும். ஆனால் அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் படத்திற்கு ஒத்துபோகவில்லை என்பது தெரிகிறது. ஏனெனில் படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு ரசிக்கும் படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதது ஏமாற்றமே.
எது எவ்வாறாயினும் 18+ படம் என்று கூறினாலும் இப்படத்தில் அந்த அளவிற்கு ஆபாச காட்சிகள் எதுவும் இல்லை. யாருக்குப் பிடிக்காவிட்டாலும் இளைஞர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் படி எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய் வரதராஜன். அதே போல இளைஞர்களை மனதில் வைத்துதான் படத்தின் வசனம், திரைக்கதை இரண்டுமே அமைந்திருக்கிறது என்பது தெளிவாகின்றது.
தொகுத்துப் பார்த்தால் மொத்தத்தில் குடும்பமாக இல்லாமல் நண்பர்களுடன் சென்று ஜாலியாக பார்க்கும் படமாக இருக்கிறது இப்படம் அமைந்திருக்கின்றது.
Listen News!