ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட படைப்பான அவதார் திரைப்படம் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை ஆடிய அப்படத்தின் 2-ம் பாகம் 13 ஆண்டு இடைவெளிக்கு பின் தற்போது வெளியாகி உள்ளது. அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்கிற பெயரில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
சுமார் 160 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டு உள்ள இப்படம், வெளியான முதல் மூன்று உலகளவில் ரூ.3500 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
இந்நிலையில் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடிகளை தாண்டி வசூல் செய்து வரும் அவதார் திரைப்படம், இதுவரை இந்தியளவில் ரூ. 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் இப்படம் ரூ.16 கோடி வசூலித்து இருந்தது. முதல் 4 நாள் வசூலைக்காட்டிலும் இது மிகவும் குறைவு என கூறப்படுகிறது.
இந்த வார இறுதியில் தான் இப்படத்தின் வசூல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கூறுகின்றனர்.தற்போது வரை உலகளவில் 500 மில்லியன் டாலர் வசூல் ஈட்டியுள்ள இப்படம், இனி வரும் வாரங்களில் இதே அளவு வசூலை ஈட்டினால் மட்டுமே 2 பில்லியன் டாலர் வசூலை எட்ட முடியுமாம் என்று கூறப்படுகின்றது.
Listen News!