உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று 'அவதார் 2' படம் திரைக்கு வந்திருக்கிறது. வெளியான நேரம் முதல் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும், சிறந்த வரவேற்புகளும் வந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாது உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் தற்போதும் முதலிடத்தில் இருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் இது என்பதால் இதுவும் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் தமிழ்நாட்டில் பல முக்கிய தியேட்டர்களில் "அவதார் : தி வே ஆஃப் வாட்டர்" வெளிவரவே இல்லை. அதற்கு காரணம் என்னவெனில் டிஸ்னி நிறுவனம் மற்றும் தியேட்டர்கள் இடையே வருவாய் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் இறுதிவரை முடிவாகாதது தான் எனக் கூறப்படுகின்றது.
அந்தவகையில் சென்னையில் ஜிகே சினிமாஸ், வெற்றி தியேட்டர் போன்ற பல முக்கிய தியேட்டர்களில் அவதார் : தி வே ஆஃப் வாட்டர் வெளிவரவில்லை. வழக்கமாக 50-50 ஆக இருக்கும் வசூல் பங்கீடு விகிதத்தை மாற்றி டிஸ்னி நிறுவனம் 70 சதவீதமாக உயர்த்திக் கேட்கிறது. இதனால் வந்த பிரச்சனை தான் இது என கூறப்படுகின்றது.
இந்த விடயமானது ரசிகர்களுக்கு தான் பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
All the investments and upgrades done towards screening this film has gone to waste, I know few theatre owners spending lakhs and few changed projectors which costs almost a crore. What a shame 🥲 https://t.co/YJ8iJHKVOs
#Avatar2 Not Happening in #Vettri due to disagreement of terms😞
Though I offered a premium from the usual Hollywood terms (incl Endgame) the distribution is not ready to budge down from their stand.
We’ve supported @DisneyStudiosIN so much in the past but EOD it’s business.
Listen News!