• Sep 19 2024

இதுவரை இல்லாத புதிய வசூல் சாதனை செய்த காத்து வாக்குல ரெண்டு காதல்-கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் நல்ல விமர்சனங்கள் பெற்றுவருகின்றது.

ஆனால் இப்படம் தமிழ் நாட்டில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெறுவதை பார்த்து வருகிறோம், அதன்படி காத்துவாக்ல ரெண்டு காதல் திரைப்படம் இங்கு நல்ல வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியான நாளில் இருந்து இதுவரை இல்லாத பெரிய வசூலை நேற்று செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதன்முலம் இப்படம் எந்தளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது என்பது நன்றாக தெரிந்துள்ளது.

அத்தோடு இந்த தகவலை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் சமந்தா இருவரும் ரீ-ட்வீட் செய்துள்ளனர். இந்த விசயம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement