ராஜா-ராணி டாஸ்க்கில் அருங்காட்சியகத்தில் பொருட்களை திருடுவதில் ஏற்பட்ட கலாட்டா பெரிதாகிக்கொண்டே செல்கின்றது.அரசர் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவராக இருப்பதால் வீட்டுக்குள் தளபதி அசீம் ஆட்டம் அதிகமானதால் வீட்டிலுள்ள சேவகர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.மேலும் இந்த கலாட்டாவில் ஆயிஷா அமுதவாணனை கத்தியை காட்டி மிரட்டினார்.
பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் இந்த வாரம் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக ராஜா,ராணி டாஸ்க் பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைவரும் தனியாக பிரிந்து மோதிக் கொள்வதை பார்க்க முடிகிறது. ராஜா, ராணி, இளவரசர், இளவரசி, தளபதி, ராஜகுரு எனவும் அரச வம்சத்திற்கு சேவை செய்யவும், அருங்காட்சியகத்தை பாதுகாக்கவும் இரண்டு குழுக்கள் உள்ளது. இதில் நடக்கும் விஷயங்கள் இந்த வாரம் பெரும் பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் அரசவை அதிகாரத்தை பயன்படுத்தி தனது சொந்த அதிகாரத்தை சொந்த வஞ்சகத்தை, அசீம் போட்டியாளர்கள் மீது தண்டனை என்று பேரில் திணிப்பதும், அரசர் அதை கேட்காமல் இருப்பதும் நடக்கிறது. எனினும் அதே போல் பிக்பாஸ் வீட்டில் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை திருடுவதற்கு அசீமிற்கு டாஸ் கொடுக்க, ஒரு வேலைக்காரன் மூலம் இதை செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் கதிரவனை அவர்கள் அவர்கள் செய்யும் வேலைகள் சேவகர்களை கடுமையாக பாதித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் தூங்காமல் பணியாற்றும் நிலையை ஏற்படுகிறது அவர்கள் பாதுகாக்க முயல்வதையும் அதை தடுக்க அசீம் தேவையற்ற முறையில் சண்டை போடுவதும் நடக்கிறது.சாதாரணமாக ஜாலியாக விளையாட வேண்டிய டாஸ்கை வசீம் சீரியஸாக தனக்கு வந்த கோபத்தின் அடிப்படையில் செய்வது மோசமான ஒன்றாக மாறுகிறது. மேலும் படை தளபதி அசீம் கடுமையான தண்டனை கொடுப்பதும் குடிமக்களிடையே பெரும் பிரச்சனையை உருவாக்கியது, பின்னர் விக்ரமன் அசீம் என்கிற தனிப்பட்ட மோதலாக மாறி பெரும் பிரச்சனையாக வெடித்தது. அதன் பிறகு கோபித்துக் கொண்ட அசீம் பிக்பாஸ் வழிகாட்டுதல் படி மீண்டும் படைத்தளபதியாக பொறுப்பேற்றார். ஆனால் அது முதல் தன்னை எதிர்த்தவர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதும் அரசரை அதற்கு பயன்படுத்துவதும் தொடர்கிறது.
நகைகளை திருடுவது என்கிற பெயரில் அவரவர் இஷ்டத்திற்கு நடப்பதால் ஒழுங்குமுறை கெட்டு ஜாலியாக நடக்க வேண்டிய டாஸ்க் மற்றவர்கள் சோர்வுப்படுத்தும் அளவிற்கு சண்டை சச்சரவாக மாறி உள்ளது. மேலும் இதில் அருங்காட்சியகத்தில் திருடும் நபராக கதிரவன் மட்டுமே இருக்கும் நிலையில் சிவன் அமுதவாணன் போன்றோர் பணம் நகைகளை திருடுவதை விளையாட்டாக செய்ய அது அருங்காட்சியக காவலர்களான தனலட்சுமி, ஆயிஷா, குயின்சி, ஏடிகே, ராம்குமார் உள்ளிட்டோருக்கு பெரும் தலைவலியாக நகைகளை மீட்கும் பொறுப்பும் அவர்கள் தலையில் விழுகிறது. இது தவிர ராஜாவைக் கொல்ல டாஸ்க் கொடுக்கப்பட்டு ராஜாவை பாதுகாக்கும் பணி அவர்கள் தலையில் விழ கஷ்டமான சூழ்நிலையில் நேற்று இரவு முழுவதும் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் அமுதவாணன் நகைகளை திருடிக் கொண்டு மறைத்து வைத்ததை அருங்காட்சிய காவலர்கள் பார்த்து விட்டனர். அப்போது அவர்களிடம் நிறைய திருப்பி திருப்பி கேட்க அவர் போக்குக் காட்டிக் கொண்டே சமையலறை பக்கம் வந்தார்.எனினும் அப்போது அங்கிருந்து அருங்காட்சிய காவலர் ஆயிஷா ஆவேசப்பட்டு அங்கிருந்த கத்தி எடுத்துக்கொண்டு ஒழுங்காக நகைகளை கொடுத்துவிடு என்று கத்தியை காட்டி விரட்ட தொடங்கினார். இது பார்வையாளர்களை பயமுறுத்தியது.
கத்தியால் யாருக்கும் வேண்டுமானாலும் காயம் ஏற்படலாம், அது பெரிய சிக்கலில் போய் முடியும் என்கிற நிலையில் திடீரென மைனா தலையிட்டு ஆயிஷா கத்தியை வைத்துவிட்டு சண்டை போடுங்கள். அத்தோடு யார் கையில் காயம் ஏற்பட்டாலும் அது பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிரச்சனை என்று கூறியவுடன், தனலட்சுமி கத்தியை வைத்து விடுங்கள் என்று சொல்ல ஆயிஷா கத்தியை வைத்துவிட்டு சண்டை போட்டார். இதை பார்த்த பிக்பாஸுக்கு நிம்மதியாக இருந்திருக்கும்.
Listen News!