பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் போட்டியாளர் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ஒரு அணியினர் ஏலியனாகவும், மற்றொரு அணியினர் ஆதிவாசியாகவும் இருக்கின்றனர்.
இந்த டாஸ்கின் விதிப்படி ஏலியன் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து ஆதிவாசி அணியினர் என்ன செய்தாலும் சிரிக்கவோ, கோபப்படவோ கூடாது.
அப்படி சிரித்தாலோ, கோபப்பட்டாலோ அவர்கள் தோற்றதாக அறிவிக்கப்படுவர். அந்த வகையில் தற்போது டாஸ்க்கும் சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது. போட்டியாளர்கள் தமக்குள் மோதிக் கொண்டும் வருகின்றனர்.
Ayesha's mental breakdown.#BiggBossTamil6 pic.twitter.com/ERJzQFCl2s
இந்த நிலையில் வெளியில் நின்ற போட்டியாளர்கள் கதவைத் தள்ளியபோது ஆயிஷா உள்ளே நின்று தள்ள முடியாமல் கத்துகின்றார். பின்னர் ஆடை மாற்றும் ரூமுக்குள் சென்று பெரிதாக கத்துவதோடு தன்னைத் தானே அடித்துக் கொள்கின்றார்.அத்தோடு எனக்கு கொஞ்சம் டைம் தாங்க பிக்பாஸ் என மூச்சு வாங்க பேசுவதையும் காணலாம்.
Listen News!