• Nov 17 2024

உள்ளே இருந்து வெளியே போனதும் மீண்டும் திருமணமா: பிக்பாஸ் பிரபலம் பற்றி வெளிவரும் தகவல்கள்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸில் இருந்து ஆயிஷா வெளியேறும் முன்பு, போட்டியாளர்களிடம் விரைவில் நல்ல செய்தி உண்டு என்று திருமணம் குறித்த அறிவிப்பை கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.

ஆயிஷா வெளியேறிய தகவல் நேற்று முன்தினமே வெளியான நிலையில் நடிகர் கமலின் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சீரியல் நடிகை ஆயிஷா தற்போது வெளியேறி உள்ளார்.

இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21போட்டியாளர்களில் ஒருவராக ஆயிஷா உள்ளே வந்தவர். இவர் ஆரம்பத்தில் நன்றாக விளையாடி இருந்தாலும் பின்னர் கொஞ்சம் டல் ஆக விளையாடி இருந்தார்.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக கமல், கடந்த வாரமே கூறிய நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் ராம் வெளியேறினார்.


கடைசி நொடியில் ஜனனி தப்பித்து ஆயிஷா வெளியேறி உள்ளார். ஆயிஷா வெளியேறும் போது திருமண ஏற்பாடு குறித்த நல்ல செய்தியை போட்டியாளர்களிடம் கூறி விட்டு சென்றார் என தகவல் தற்போது இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் மிக விரைவில் அவரின் திருமண அறிவிப்புகள் வெளிவரும் என்று ரசிகர்கள்  பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். 

ஆனால் அவர் ஏதும் இதைப் பற்றி விளக்கம் தந்தால் தான் நமக்கு தெரிய வரும் என்பதுதான் உண்மை.அத்தோடு இவருக்கு திருமணம் ஆகி விட்டது என இவரது முன்னாள் காதலர் கூறிய விடயம் தீயாய் பரவி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement