• Sep 21 2024

தங்குவதற்கு ரூம் இல்லாமல் வீதியிலேயே சுற்றித் திரியும் பாக்கியா- மோசமாக திட்டித் தீர்த்த ஈஸ்வரி- செழியனைக் கடுப்பாக்கிய ஜெனி- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா ஓட்டிட்டு வந்த கார் இடையில் நின்றதால் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் கீழே இறங்கி நிற்கின்றனர்.அப்போது பைக்கில் ஒருவர் வந்து இவர்கள் முன்னாடி நிற்க எல்லோரும் பார்த்து பயப்பிடுகின்றனர். பினன்னர் அந்த நபர் இறங்கி வந்து என்னாச்சு என்று கேட்க பாக்கியா நடந்ததைக் கூறுகின்றார். 


இதனால் அவர் நான் வண்டிக்கு என்ன ஆசசு என்று பார்க்கலாமா என்று கேட்க,பாக்கியாவும் ஓகே சொல்கின்றார். அப்போது அவரும் பார்த்து விட்டு ஒன்றும் பிரச்சினையில்லை இஞ்சின் சூடாகி விட்டது. சரி பண்ணிடலாம் என்று சொல்கின்றார். இந்த நேரம் பார்த்து கோபி போன் பண்ணி ஹொட்டலுக்கு போய்ட்டீங்களா என்று கேட்கின்றார்.

அப்போது ஈஸ்வரி கார் திடீரென நின்று போய் இடையில நிற்கின்றோம் என்று சொல்கின்றார். இதைக் கேட்ட கோபி கடுப்பாகி பாக்கியாவைத் திட்டுகின்றார். தொடர்ந்து கார் சரியானதும் பாக்கியா எதுக்கு அத்தை இப்போ இதெல்லாம் அவர் கிட்ட சொன்னீங்க, இனிமேல் எதுவும் சொல்லிடாதீங்க அத்தை என்று கேட்கின்றார்.


மறுபுறம் எழில் மாலினியின் வீட்டிலிருந்து அல்பம் பார்த்திட்டு இருக்கின்றார்.அப்போது ஜெனி போன் பண்ணி பேசுகின்றார். ஜெனி நான் உன்னை மிஸ் பண்ணல வீட்டில இருக்கிறவங்களை தான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் என்று சொல்ல செழியன் கடுப்பாகி போனை கட் பண்ணுகின்றார். தொடர்ந்து பாக்கியா ஹொட்டலுக்கு போகின்றனர்.

அங்கே தங்களுடைய ரூம் பற்றி விசாரிக்க அவர்கள் இங்கு ரூம் இல்லை, என்று சொல்ல ஈஸ்வரியும் இனியாவும் அதிர்ச்சியடைகின்றனர்.அத்தோடு நாங்க போன் பண்ணினோம் நீங்க எடுக்காததால் நாங்க வேற ஒருத்தங்களுக்கு கொடுத்திட்டோம் என்று சொல்ல பாக்கியா வேற ரூம் ஏதாவது இருக்கிறதா என்று பாருங்க என்று சொல்கின்றார்.அவர்கள் ரூம் இல்லை என்று சொல்ல ஈஸ்வரி பாக்கியாவைத் திட்டுகின்றார்.


இருந்தாலும் பாக்கியா ஈஸ்வரியை சமாளித்து விட்டு காரில் ஏற்றிக் கொண்டு ரூம் தேடுவதற்காக போகின்றார். அப்போதும் ஈஸ்வரி பாக்கியாவைத் திட்டிக் கொண்டே வருகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement